கடைகளை வாடகைக்கு விடுவதில் முறைகேடு செய்த நகராட்சி நிர்வாகம்...!

கடைகளை வாடகைக்கு விடுவதில் முறைகேடு செய்த நகராட்சி நிர்வாகம்...!

காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி கடைகளை வாடகைக்கு விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அளிக்கப்பட்ட மனு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

காரைக்காலை சேர்ந்த நாகராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நேரு கடைத்தெரு பகுதியில் 117 கடைகள் உள்ள நிலையில் அந்த கடைகளை வாடகை மற்றும் குத்தகைக்கு விடுவதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு, ஐந்து பேருக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் என யாருக்கும் கடைகள் ஒதுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். 

எனவே கடைகள் ஒதுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரியும் காரைக்கால் நகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ண குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் விண்ணப்பம் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு காரைக்கால் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com