
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து மழையானது பெய்து வந்தது . இந்த சூழலில் பெரும்பாலான இடங்களில் நீர் தேக்கம் மற்றும் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது .
இதனை தொடர்ந்து கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை மூங்கில்காடு பகுதியில் வெளுத்து வாங்கிய மழையால் சில தினங்களுக்கு முன்பு காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது .
அதனைதொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தற்போது மீண்டும் காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டுள்ளது . இதனால் அவசர தேவைக்கு கூட பெண்கள் பெரியவர்கள் என ஆற்றை ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர் . மேலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.