"காவிாி விவகாரத்தில் கா்நாடகா மனிதாபிமானமின்றி செயல்படுகிறது" - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மனிதாபிமானமின்றி செயல்படுவதாக த.மா.கா. தலைவர் ஜி. கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளாா்.

நீலகிாி மாவட்டம் கோத்தகிாி அரு கே உள்ள மேல் அனையட்டி கிராமத்தில் புதிய சமுதாய கூடத்தை திறந்து வைத்த த.மா.கா. தலைவர் ஜி. கே.வாசன், தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்தார்.

இதையும் படிக்க : 1- 5-ம் வகுப்பு மாணவா்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு...!

அப்போது பேசிய அவர், காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு மனிதாபிமானமின்றி செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என குற்றம்சாட்டினாா்.

மேலும் காவிரி ஒழுங்காற்று குழு மேலாண்மை வாரியம் கூறியபடி, தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி நாளை அரியலூர் மாவட்டம் திருமானூரில் டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக கூறினாா்.