காவேரி குண்டாறு திட்டம் நிச்சயம் கட்டிக் முடிக்கப்படும்...துரைமுருகன் உறுதி!

காவேரி குண்டாறு திட்டம் நிச்சயம் கட்டிக் முடிக்கப்படும்...துரைமுருகன் உறுதி!

காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நான்காவது நாளாக, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற வினாக்கள் விடைகள் நேரத்தில், காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் திமுக ஆட்சியில் தொய்வடைந்துள்ளது, என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.  இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என விஜயபாஸ்கர் வலியுறுத்தினார். 

இதையும் படிக்க : பிரபலங்கள் வீடுகளில் தொடரும் திருட்டு சம்பவம்...பின்னணி பாடகர் வீட்டில் நகைகள் கொள்ளை!

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் கொண்டு வந்தார் எனவும், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் காவேரி குண்டாறு திட்டம் நிச்சயம் கட்டிக் முடிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.