ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருப்பதா? - இபிஎஸ் கண்டனம்!

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி பெற்ற லட்சக்கணக்கான பட்டதாரிகள் இருக்கும் நிலையில், ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ஒடிசாவில் மீண்டும் தடம்புரண்ட ரயில்...விளக்கமளித்த கிழக்கு ரயில்வே!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி பெற்ற லட்சக்கணக்கான பட்டதாரிகள் உள்ளனர் என்றும், ஆனால் தற்போது வரை பணியிடங்களை நிரப்பாமல், திறனற்ற அரசு செயல்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட, போர்க்கால அடிப்படையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
— AIADMK (@AIADMKOfficial) June 5, 2023
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள். pic.twitter.com/hSDlhnO6KC