ஜமேஷா முபீன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்...ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை நடத்தி வரும் சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
கார் வெடிப்பு:
தீபாவளிக்கு முதல்நாளான அக்.23 ஆம் தேதி, கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக ஒரு கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விசாரணை:
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு தற்போது விசாரித்து வருகிறது. இதற்கு முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நகர போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
மரப்பலகை செய்தி:
ஜமேஷா முபீன் என்பவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டமரப்பலகையில் அல்லாவின் வீட்டைத் தொடுபவர் வேரோடு பிடுங்கப்படுவார் என எழுதப்பட்டிருந்தது.
கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்:
இது குறித்து கோவை போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அவர்கள் முபீனின் வீட்டில் இருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் பிற ஆவணங்களை மீட்டெடுத்துள்ளனர். இது தவிர ஜிகாத் குறித்து கையால் எழுதப்பட்ட குறிப்புகளும் கிடைத்துள்ளன.
மனித பிரிவு:
மேலும் மனித இனம் முஸ்லீம்கள் மற்றும் காபிர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளது. இது தீவிரமயமாக்கலின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இளைஞர்களின் கடமை:
ஆதாரங்களின்படி, அதிகாரிகள் கையால் எழுதப்பட்ட குறிப்பைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் - ஜிகாத் இளைஞர்களின் கடமை எனவும் அது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கடமை அல்ல எனவும் எழுதப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பா?:
முபீனின் வீட்டில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியின் படம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ”எனது மனைவி தான் காரணம்” டாடா சன்ஸ் குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி மரணத்தில் வாக்குமூலம் அளித்த கணவர்!!!