மீனவர்களை தாக்கி இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்...!

Published on

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதால் உயிர் பயத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர். 

வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேர், அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கும் தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர், நமது மீனவர்களை கத்தியால் தாக்கியதுடன், சுமார் 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். 

இதில் காயம் அடைந்த மீனவர்கள் மணியன், கோடிலிங்கம் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com