
திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பூந்தமல்லி பகுதியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, பூந்தமல்லி பகுதியில் ஆய்வு மேற்க்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
மாநகர் மற்றும் புற நகர் பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது என்றும் திமுக அரசு சரியாக திட்டமிடாததால் தண்ணீர் தேங்கி மக்கள் அவதி படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
பூந்தமல்லி பகுதியில் நான் ஆய்வுக்கு வருவது அறிந்து வேகவேகமாக வெள்ள நீரை அகற்றியதாக பொதுமக்கள் தெரிவித்ததாக கூறிய அவர், அரசு விழிப்போடு இருந்து செயல்பட்டு மருத்துவ முகாம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, வேளான் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறினார்.