கொடைக்கானல்: தொடர் கனமழை.. ஒரு பக்கமாக சரிந்து விழுந்த சாலை.. போக்குவரத்து கடும் பாதிப்பு!!

கொடைக்கானல்: தொடர் கனமழை.. ஒரு பக்கமாக சரிந்து விழுந்த சாலை.. போக்குவரத்து கடும் பாதிப்பு!!

கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெரியகுளம் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை சரிந்தது. இந்த சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கொடைக்கானலில் தொடர்ச்சியாக மழை

கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே மரங்கள் சாய்வது மற்றும் மண் சரிவுகள் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக கொடைக்கானல் அருகே பெரியகுளம் செல்லக்கூடிய பிரதான சாலையான, குருடிக்காடு சாலை சரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவ்வழியாக பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.  போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை

தொடர்ந்து சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மணல் மூட்டைகளை அடுக்கி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும், நிலையில் மழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் அப்பகுதியில் சாலை சரியும் அபாயம் உள்ளதால் உறுதி தன்மையுடன், விரைந்து சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.