கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உதவியாளரிடம் 2வது முறையாக மீண்டும் விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியின் உதவியாளர் நாரயணசாமியிடம் இரண்டாவது முறையாக இன்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு  கொலை, கொள்ளை வழக்கு.. முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உதவியாளரிடம்  2வது முறையாக மீண்டும் விசாரணை!
Published on
Updated on
1 min read

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி இதுவரை விசாரிக்கப்படாத நபர்களை விசாரணை வளையத்திகுள் கொண்டு வந்துள்ளனர்.

சசிகலா, அவரது உறவினர் விவேக், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகன், சகோதரரின் மகன் உள்ளிட்ட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி வழக்கிற்கு தேவையான பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஆறுக்குட்டியின் உதவியாளர் நாரயணசாமியிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாரயணசாமியிடம் தனிப்படை போலீசார் கோத்தகிரியில் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com