கிருஷ்ணகிரி : விவசாயிகள் சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் விழா..!

போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமத்தில் விவசாயிகள் சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி :  விவசாயிகள் சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் விழா..!
Published on
Updated on
1 min read

போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமத்தில்  விவசாயிகள் சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் விழா நடைபெற்றது.

பனை மரங்களின் பயனை உணர்ந்த பலரும் தற்போது பனை விதை நடவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்த  விவசாயிகள் குழு சார்பில், பாலகிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள்   அகரம் தென் பெண்ணை ஆற்றங்கரை ஓரங்களில் முதற்கட்டமாக 5000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.

ஆற்றங்கரை ஓரங்களில் பனைமர விதைகள் நடப்பட்டால், வருங்காலத்தில் பேரிடர் காலங்களில் கரை ஓரங்களில் உறுதி தன்மை ஏற்படும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்ற நோக்கில் இந்த பனை விதைகளை நடவு செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் அடுத்த கட்டமாக அகரம் ஏரிக்கரை, 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com