"நீட் தன்மாய்ப்பு தவிர்க்கப்பட வேண்டும்" கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

"நீட் தன்மாய்ப்பு தவிர்க்கப்பட வேண்டும்" கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

நீட் தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என சென்னை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியளித்துள்ளார்.

 சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது குரோம்பேட்டை பகுதியில் நீட் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட தந்தைக்கும் மகனுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என தெரிவித்தார்.

நாங்குநேரியில் சின்னத்துரை என்ற பள்ளி மாணவன் சக மாணவர்களால் மிகப்பெரிய தாக்குதலுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் கையில் பேனாக்கள் தூக்கி புத்தகங்களை தாங்கியும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் அரிவாள்களை கையில் எடுத்து வன்முறையில் ஈடுபடக் கூடிய அளவிற்கு மாணவர்கள் செல்வது, சாதிய வன்மத்தோடு பள்ளிகளில் நடந்து கொள்வது, இது தமிழ் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை உருவாக்கக்கூடிய செயலாகும். இதை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

 இந்த சம்பவம் ஒரு இடத்தில், ஒரு பகுதியில், நடந்து விட்டதாக கருதக் கூடாது இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தை சார்ந்த பள்ளிகள் கல்லூரிகளில் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் நடந்திருக்கின்றன. நடந்து வருகின்றன. எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணக்கூடிய வகையில் தமிழக அரசு, தமிழக காவல்துறை, கல்வித்துறை, ஆகியவை இணைந்து பெற்றோர்களையும், சமூக ஆர்வலர்களையும், இதர கட்சி தலைவர்களையும், அழைத்து பேசி நிரந்தர முடிவு காண வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் கல்வித்துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட்  21ஆம் தேதி முதற்கட்டமாக நாங்குநேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என தெரிவித்த அவர், தொடர்ந்து தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெறும் எனவும் கூறினார்.

இதையும் படிக்க:பி.வி.ஆர். திரையரங்கில் மூட்டைப் பூச்சி!