இதுவரை தமிழ்நாட்டில் 460 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது - அமைச்சர் சேகர்பாபு!

இதுவரை தமிழ்நாட்டில் 460 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது - அமைச்சர் சேகர்பாபு!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் 460 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளையொட்டி சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை கனிமொழி எம்.பி,  அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, பழங்குடியினர் மற்றும் அட்டவணை பிரிவினர் வசிக்கும் இடங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இதுவரையில் 460 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 2000 திருக்கோவில்களில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிய ஆட்சியாக இந்த ஆட்சி இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com