அரிகொம்பனை பிடிக்க வந்த கும்கி...சிக்குவானா இந்த அடங்காத கொம்பன்...!

அரிகொம்பனை பிடிக்க வந்த கும்கி...சிக்குவானா இந்த அடங்காத கொம்பன்...!

Published on

தேனி மாவட்டம் கம்பம் நகரில் முகாமிட்டுள்ள அரிகொம்பன் காட்டு யானையைப் பிடிக்க கும்கி யானை கொண்டுவரப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரி கொம்பன் காட்டு யானையை தமிழக கேரள எல்லையில் உள்ள தேக்கடி புலிகள் சரணாலயத்தில் கொண்டு வந்து விட்ட நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகப் பகுதிக்கு இடம் பெயர்ந்த அரி கொம்பன்  யானை கம்பம் நகர் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

27 ஆம் தேதி காலை லோயர் கேம்ப் பகுதியிலிருந்து கம்பம் நகருக்குள் நுழைந்த அரிகொம்பன் யானை பொதுமக்களை துரத்திக்கொண்டு அட்டகாசங்கள் செய்து வருகிறது. அரிகொம்பனைக் கண்காணித்து வரும்  வனத்துறையினர்,  அந்த யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க  நிபுணர்கள் குழுவை வரவழைத்துள்ளனர். 

அதன்படி. ஆனைமலையிலிருந்து சுயம்பு என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கும்கி யானை வந்து கொண்டிருப்பதாகவும் வனத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com