குறள் அமிர்தம் நூல் வெளியீட்டு விழா…  

ஜீவ அமிர்தம்  மாத இதழின் ஆசிரியர் கோ.திருமுருகன் அவர்கள் திருக்குறளுக்கு சித்தர் மரபில் எழுதியுள்ள மெய்ப்பொருளுரை, "குறள் அமிர்தம்" என்ற பெயரில் நூலாக நேற்று வெளியிடப் பெற்றது.

குறள் அமிர்தம் நூல் வெளியீட்டு விழா…   

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் "குறள் அமிர்தம்" நூலையும், "திருக்குறள் தமிழிசைப்பாடல்கள்" குறுந்தகட்டையும் நேற்றுக் காலை வெளியிட்டார். அப்போது நூலாசிரியர் கோ.திருமுருகன், நாராயணன்,சுப்பையா, கார்த்திகேயன். வசந்தகுமார் பாலசுப்பிரமணி முதலானோர் உடன் இருந்தனர். நேற்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில், மாண்புமிகு தொழில், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் குறள் அமிர்தம் நூலை வெளியிட்டு விழாப் பேருரை ஆற்றினார். திருக்குறள் உலக அளவில் போற்றப்படும் புனித நூலாகத் திகழ்கிறது. அது இந்தியாவின் தேசிய நூலாகும் காலம் விரைவில் வரவேண்டும் என்றார்.

நூலைப் பெற்றுக்கொண்ட மாண்புமிகு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், தமிழ் வளம்பெறும் பொற்காலம் தமிழகத்தில் மீண்டும் திரும்பியிருக்கிறது என்றார். விழாவில், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், வி.ஜி. சந்தோசம், நல்லி குப்புசாமி, பிறைசூடன், இரவி பாரதி, மயிலை சட்டமன்ற உறுப்பினர் த .வேலு, சங்கர் சின்னையா, வைதேகி திருமுருகன், சுந்தர ஆவுடையப்பன் முதலானோர் கலந்து கொண்டு வாழ்த்துரைத்தனர். "திருக்குறள் தமிழிசைப் பாடல்கள்" குறுந்தகடு, "திருக்குறள் வாழ்த்துப்பா" வீடியோ, "ஜீவ அமிர்தம்" மாத இதழின் எட்டாம் ஆண்டுச் சிறப்பிதழ் ஆகியனவும் விழாவில் வெளியிடப் பெற்றன.