விசாரணைக்கு அழைத்து சென்ற குறவர் இன மக்கள் மாயம்....! தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்..!

விசாரணைக்கு அழைத்து சென்ற குறவர் இன மக்கள் மாயம்....!  தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்..!
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி அருகே விசாரணைக்காக அழைத்து சென்ற குறவர் இன மக்களை  திருப்பி அனுப்பாததால் அப்பகுதி மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியாண்டபட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 15 -க்கும் மேற்பட்ட நபர்கள்,  புளியண்டபட்டி கிராமத்தில் உள்ள கண்ணம்மாள், ஸ்ரீதர், ஐயப்பன், அருணா ஆகிய நான்கு பேரை  அழைத்துச் சென்றுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, திங்கட்கிழமை இரவு அதேபோல் 20 -க்கும் மேற்பட்ட ஆந்திர போலீஸார் கிராமத்தில் புகுந்து ரமேஷ், சத்யா மற்றும்  பூமதி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.  அப்போது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமரா மற்றும் அவரது வீட்டில் இருந்த பீரோ மற்றும் பொருட்கள் சேதப்படுத்தி சென்றதாகத்  தெரிகிறது.

 இது குறித்து புலியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் உறவினர்கள் தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் காவல் நிலையம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்ததாக தெரிகிறது. பின்னர், இந்த புகாரின் பேரில் கடந்த ஐந்து நாட்களாக எந்தவித நடவடிக்கையும்  எடுக்கப்படாத நிலையில் நேற்று மாலை பொதுமக்கள் போலீசாரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுமூக நிலை ஏற்படாததால், இரவு மத்தூர் காவல் நிலையம் முன்பு 20 -க்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,  இரவு வேளையில் பச்சிளம் குழந்தை உட்பட வயதான மூதாட்டியையும் சேர்ந்து 7 பேரை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று இதுவரை திருப்பி அனுப்பவில்லை என்றும் மேலும் அழைத்துச் சென்ற ஏழு பேரில் 5 பேரை மட்டும் காண்பிப்பதாகவும் இரண்டு பேர் இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்தனர். எனவே, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த ஏழு பேரை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும் குரவன் இன சங்கம் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இரவு வேளையில் காவல் நிலையம் முன்பு 20க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com