குடமுழுக்கை ஒட்டி லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..!

குடமுழுக்கை ஒட்டி லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..!

அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு வெகுவிமர்சையாக நடைபெற்றது.  சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் வேத மந்திரங்கள் முழங்க மலை மீதுள்ள ராஜகோபுரம் மற்றும் தங்க விமானம் மீது புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

குடமுழுக்கின் போது குலுக்கல் முறையில் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கிப்பட்டது. பின்னர் 11 மணிக்கு பிறகு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்ததை அடுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரத்தில் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் பாதுகாப்பு பணியில் கூடுதலாக நான்காயிரம் போலீசார் வரை ஈடுபடுத்தப்பட்டனர்.