”நீட் விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர் குழம்பியுள்ளார்” ஈபிஎஸ்க்கு அமைச்சர் பதில்!

”நீட் விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர் குழம்பியுள்ளார்” ஈபிஎஸ்க்கு அமைச்சர் பதில்!
Published on
Updated on
1 min read

நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குழம்பிய நிலையில், பேசி உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னை தரமணியில் கட்டப்பட்டுள்ள புதிய மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நீட் வந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதை சுட்டிக்காட்டி பேசியவர், 2019 ஆம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சியில் நீட் வந்ததாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குழம்பிய நிலையில் பேசியதாகவும் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து, திமுகவின் உண்ணாவிரத போராட்டம் நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதிலளித்த அமைச்சர்,  மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்த்து அனைவரும் எள்ளி நகையாடுவதாக கூறினார்.

மேலும், எதிர்க்கட்சி தலைவர் பூதக்கண்ணாடி வைத்து குறைகளை தேடி வந்தாலும், அவருக்கு எந்த குறைகளும் கிடைக்கவில்லை என்பதால் யாராவது புகை பிடித்து விட்டால் கூட புகை பிடிக்கக் கூடாத இடத்தில் புகைப் பிடித்து விட்டார் என்று குறை கூறுவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடுமையாக குற்றம் சாட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com