சாய்ந்து விழும் நிலையில் உயர்மின் அழுத்த கோபுரம்...விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தல்!

சாய்ந்து விழும் நிலையில் உயர்மின் அழுத்த கோபுரம்...விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தல்!
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் கனிம வள கொள்ளையர்களால் சாய்ந்து விழும் நிலையில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக ஜெயமங்களம் கிராம பகுதியில்,  திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு 2 ஆயிரத்து 300 கிலோ வாட்  மின்சாரம் கொண்டு செல்லும் வழித்தடத்தில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தை சுற்றி 30 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் எந்த நேரத்திலும் உயர் மின்னழுத்த கோபுரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com