எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் வழங்கிய லீலாவதி காலமானார்...

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் வழங்கிய லீலாவதி காலமானார்...

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானமாக வழங்கிய அவருடைய அண்ணன் மகள் லீலாவதி இன்று காலமானார்.
Published on

1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்குத் தன்னுடைய ஒரு சிறுநீகத்தை அளித்து எம்ஜிஆரின் புனர்வாழ்வுக்குக் காரணமாக இருந்தவர் லீலாவதி.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அவருடைய அண்ணன் மகள் லீலாவதி சென்னையில் இன்று அதிகாலை காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனுடைய அண்ணன் சக்கரபாணியின் மகள் தான் லீலாவதி.

தனது சித்தப்பாவான எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தேவைப்படுவதை அறிந்த அவர், உடனடியாக தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். இதை அறிந்த எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் மகள் லீலாவதியை ராமாபுரம் தோட்டத்திற்கு அழைத்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லீலாவதி சென்னையில் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். அவருடைய மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com