எங்க பிள்ளைகளை படிக்க விடுங்க பள்ளி வாயிலை மறித்து கால்வாய் - கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

ஊராட்சி ஒன்றிய மழலையர் மற்றும் நடு நிலைப்பள்ளியின் முன்பாகவும் இந்த வாய்க்கால் சுமார் 4 அடி உயரத்துக்கு உயர்த்தி கட்டப்பட்டுள்ளதால் மாணவர்கள் செல்ல வழியின்றி ஆசிரியர்கள் இருவர் நின்று மாணவர்களை பாதுகாப்பாக தூக்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது

எங்க பிள்ளைகளை படிக்க விடுங்க  பள்ளி வாயிலை மறித்து கால்வாய் - கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருப்பத்தூர் சாலையில்  நாவினிப்பட்டி கிராமம் உள்ளது, இப்பகுதியில் மேலூரிலிருந்து-காரைக்குடி வரை,சென்னை - கன்னியாகுமரி நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையை அகலப்படுத்தி சாலையின் இருபுறமும் கழிவுநீர் மற்றும் மழை நீர் செல்ல வாய்க்கால்கள் கட்டப்பட்டு வருகிறது,மிகவும் உயர்த்தி கட்டப்பட்டு வரும் இந்த வாய்க்கால் கட்டுமானப்பணியால் வீடுகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வருகிறது .

மேலும் படிக்க | தமிழ் கட்டாய பாடச் சட்டம்.. ! தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தற்போது இங்குள்ள ஊராட்சி ஒன்றிய மழலையர் மற்றும் நடு நிலைப்பள்ளியின் முன்பாகவும் இந்த வாய்க்கால் சுமார் 4 அடி உயரத்துக்கு உயர்த்தி கட்டப்பட்டுள்ளதால் மாணவர்கள் செல்ல வழியின்றி ஆசிரியர்கள் இருவர் நின்று மாணவர்களை பாதுகாப்பாக தூக்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது,இதனால் தங்களது பிள்ளைகள் தடுமாறி விழுந்து காயமடைய வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆவேசத்துடன்  பள்ளியை முற்றுகையிட்டனர்,அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் தவுலத்பீவியின் கணவர் பீர்முகம்மது விடம் இது குறித்து தெரிவித்து,மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் எப்படி இதை அனுமதிக்கலாம் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்தும் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

மேலும் படிக்க | பார்வையாளர்களை பயத்தின் உச்சகட்டத்திற்கு கொண்டுசெல்ல வருகிறது லேடி சூப்பர்ஸ்டாரின் கனெக்ட்


இங்கு கல்வி பயிலும் 100 க்கும் மேற்பட்ட 
மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வரும் நிலையில் உடனடியாக இதை சரிசெய்ய வேண்டும்,அல்லது மாற்றுவழி ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,பள்ளி முற்றுகையால் அப்பகுதியே சிறிது நேரம் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது,உடனடியாக சரி செய்ய தாமதம் ஏற்பட்டால் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையின ரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடும் நிலை உருவாகும் என பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.