சென்னை மக்களே ஜாக்கிரதை... கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் மீண்டும் கொரொனா அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளது.

சென்னை மக்களே ஜாக்கிரதை... கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு...

தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலையின் பாதிப்பு குறைய தொடங்கி இருக்கும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக சென்னை, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15லிருந்து 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் கூடிய வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதியான ஒன்பது இடங்களில் கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை பொருத்தவரையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அங்கு தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.

நாளொன்றிற்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கேரளாவில் இருந்து 5 ரயில்களும், வடமாநிலத்தில் இருந்து இரண்டு ரயில்களும், பெங்களூரில் இருந்து இரண்டு ரயில்கள் என மொத்தம் 9 ரயில்கள் வரக்கூடிய சூழலில் அதற்காக பொதுமக்கள் காத்திருக்கும் நிலையில் பொதுமக்கள் முறையாக சமூக இடைவெளியை பின் பற்றாமலும் முககவசம் அறியாமலும் இருக்கிறார்கள். இதனால் தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.