மதுபான ஏடிஎம் வசதி அதிர்ச்சியளிக்கிறது...! திருமாவளவன் பேட்டி...!!

மதுபான ஏடிஎம் வசதி அதிர்ச்சியளிக்கிறது...! திருமாவளவன் பேட்டி...!!
Published on
Updated on
1 min read

தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுபான வகைகளை பெற முடியும் என்கிற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமும் இல்லை என தொல்.திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

இன்று,மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புதியதாக தானியங்கி மது விற்பனையகம் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுபான வகைகளை பெற முடியும் என்கிற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமும் இல்லை. மாண்புமிகு முதல்வர் இதை பரிசீலிக்க வேண்டும்.

படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ள இயக்கம் திமுக என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில், தேர்தல் வாக்குறுதியிலேயே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எனவே படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முதல்வர் முன்வர வேண்டுமே ஒழிய, தானியங்கி எந்திரத்தின் மூலம் மது வகைகளை பெறும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஏற்புடையது அல்ல" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக  விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மது விற்பனை செய்யம் தானியங்கி இயந்திரத்தை தமிழ்நாடு அரசு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com