தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும்- மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும்- மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் இன்று அனைத்து பகுதிகளிலும் சுமார் 900க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 70 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டோர் அருகிலுள்ள கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று, தடுப்பூசி செலுத்திகொள்ளலாம். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை அல்லது குறுஞ்செய்தியினை விற்பனையாளரிடம் காண்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.  

மேலும் அனைத்து டாஸ்மாக் விற்பனையாளர்களும் தங்களிடம் மதுபானம் பெற்றுசெல்லும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளதை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யாமல் தனி நபருக்கு மதுபானம் விற்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவின் கீழ் உரிய கடுமையான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரித்துள்ளார்.