கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுமா?...எதிர்பார்ப்பில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்!

கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுமா?...எதிர்பார்ப்பில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்!

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் இன்று நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் மாநாடு:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் இன்று சென்னை தீவுத்திடலில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: "ஒரு நரியைப் போல் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, சிங்கம் போல் ஒரு நாள் வாழ்வது சிறப்பானது”

கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுமா?:

இந்த மாநாட்டில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அறிவிப்புகளை முதலமைச்சர்  வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில், ஏற்கனவே பலமுறை போராட்டம் நடத்தி வந்த நிலையில், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.