உள்ளாட்சி தேர்தல்... திமுக அதிக இடங்களில் முன்னிலை

தமிழகத்தில்  9 மாவட்டங்களுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

உள்ளாட்சி தேர்தல்... திமுக அதிக இடங்களில் முன்னிலை

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. 

இதுவரை வெளியான முடிவுகளின் படி 9 மாவட்ட ஊராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. 74 ஊராட்சி ஒன்றியங்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் நிலையில் உள்ளது. 

140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 120 இடங்களை திமுக முன்னிலை பெற்றுள்ளது. 5 இடங்கள் மட்டுமே அதிமுக வசம் உள்ளது.

அதேபோல் 1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 500 க்கும் மேற்பட்ட இடங்களை திமுக தன் வசம் ஆக்கி உள்ளது. 25 இடங்களில் மட்டுமே அதிமுக  வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. 

இதன் மூலம் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியை சந்திக்கிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் பிரசாரம் எடுபடாததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

6 மாதங்களுக்கு முன் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக தற்போது ஒரு ஊராட்சி ஒன்றியத்தைக் கூட பிடிக்க முடியவில்லை. அதேபோல் தனித்து  களமிறங்கிய  பாமக தேமுதிக மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ளன.