உள்ளாட்சி தேர்தல்... கடைசி நேரத்தில் களமிறங்கிய அமைச்சரின் மனைவி..!

தமிழக அரசியலில் முதன் முறையாக அமைச்சர் ஒருவரின் மனைவி பேரூராட்சி வார்டு மெம்பர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

உள்ளாட்சி தேர்தல்... கடைசி நேரத்தில் களமிறங்கிய அமைச்சரின் மனைவி..!

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மனைவி சைதானி பீவி வார்டு கவுன்சிலர் பதவிட்கு போட்டியிடுகிறார். இதே போல், அமைச்சர் மஸ்தானின் மகனும் (மொக்தியார் மஸ்தான்) அதே செஞ்சி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி முக்கிய பிரமுகர்கள் குடும்பங்களில் இருந்து பலர் இந்த முறை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.

அந்த வகையில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகனும், மனைவியும் செஞ்சி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு வெவ்வேறு வார்டுகளில் போட்டியிடுகிறார்கள்.

பொதுவாகவே அமைச்சராக இருப்பவர்களின் வாரிசுகள் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட விரும்புவார்கள். ஏனென்றால், பேரூராட்சி அளவிற்கு போட்டியிடுவதை தங்களுக்கு பிரெஸ்டிஜ் பிரச்சனை என்று நினைப்பார்கள். ஆனால், தமிழக அரசியல் வரலாற்றிலே முதன் முறையாக அமைச்சர் ஒருவரின் மனைவியும், மகனும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது இதே முதல்முறை... 

செஞ்சி பேரூராட்சி ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகல், அமைச்சரின் மனைவி சைதானி பீவி வெற்றி பெற்றால் கூட கவுன்சிலராக தான் இருக்க முடியும். இருப்பினும், கவுன்சிலராக இருப்பதை கவுருவ குறைச்சலாக கருதாமல் துணிந்து போட்டியிடுகிறார் அமைச்சர் மஸ்தானின் மனைவி சைதானி பீவி... 

உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் மஸ்தானின் மகன் மட்டும் போட்டியிடும் திட்டத்தில் இருந்த நிலையில், திடீர் திருப்பமாக அமைச்சரின் மனைவியும் நேற்று கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.