ஆண்டவா இனிமே விபத்து நடக்கக்கூடாது....! திருநங்கையை வைத்து திருஷ்டி கழித்த போலீசார்....!

ஆண்டவா இனிமே விபத்து நடக்கக்கூடாது....!   திருநங்கையை வைத்து திருஷ்டி கழித்த போலீசார்....!

சென்னை மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ஒரே நாளில் மட்டும் இரண்டு விபத்துகளில் அடுத்தடுத்து 2 பேர் பலியான நிலையில் பொதுமக்கள் பலரும் அச்சத்திற்குள்ளாயினர். 

இந்நிலையில், தொடர்ந்து இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படக்கூடாது என முடிவெடுத்த போலீசார், பேசாமல் ரோட்டுக்கே திருஷ்டி கழித்தால் என்ன என நினைத்தார். ஒரு வாகனம் புதிதாக வாங்கினால் அது நல்ல முறையில் ஓடுவதற்கும் விபத்தில் சிக்காமல் இருப்பதற்கும் எலுமிச்சைப்பழம் வைத்து இறுதியாக பூசணிக்காய் உடைப்பது ஒருசிலரின் நம்பிக்கை. 

இதேபோல, ஒட்டு மொத்த பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்ட போக்குவரத்து போலீசார் ஒருவர் ரோட்டுக்கு திருஷ்டி கழிக்க ஒரு திருநங்கையை அழைத்து வந்தார். கோடை வெயில் கொளுத்தியபோதும் செருப்பு கூட அணியாமல்  அந்த திருநங்கை சாலைக்கே திருஷ்டி சுற்றி பூசணிக்காயை ஓரமாக போட்டு உடைத்தார். 

இதையடுத்து எலுமிச்சைப்பழம் சுற்றி போட்டு காலால் நசுக்கிப் போட்ட திருநங்கை போக்குவரத்து போலீசாரின் வாகனத்திலேயே பந்தாவாக அமர்ந்தார். 

இதில் கொடுமை என்னவென்றால், சாலைகளில் விபத்து ஏற்படக்கூடாது என தொலைநோக்கு பார்வையுடன் முயன்ற போலீசார், உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காயை அங்கேயே போட்டு விட்டு சென்றனர்.  சாலையோரத்தில் பூசணிக்காய் உடைக்கக்கூடாது என அறிவுறுத்துவதும் போலீசார்தான். ஆனால் விபத்தே நடக்கக்கூடாது என திருஷ்டி பூசணிக்காய் உடைத்ததும் போலீசார்தான்.  

இதையும் படிக்க     | தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு...தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை!