நாகூர் ஆண்டவர் தர்காவில் இஃப்தார் நோன்பு - சசிகலா பங்கேற்பு !

நாகூர் ஆண்டவர் தர்காவில் இஃப்தார் நோன்பு - சசிகலா பங்கேற்பு !

Published on

நாகையில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா கலந்து கொண்டார். நாகூர் ஆண்டவர் தர்காவில் தர்கா ஆதீனம் ஹாசிருள் பாசித் சாஹிப் தலைமையில் இஃப்தார் விருது நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சசிகலா  நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளை வாசித்து, அவர் வழிகாட்டுதலை பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது நிச்சயம் என கூறினார்.

அதனைத்தொடர்ந்து நாகூர் ஆண்டவருக்கு மலர்ப் போர்வை வழங்கி சிறப்பு துவா செய்த  சசிகலாவிற்கு, நாகூர் ஆண்டவர் தர்காவின் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
 
   

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com