குறைந்த மேட்டூர் நீர் இருப்பு; பயிர்களுக்கு குடங்களில் தண்ணீர் எடுத்துச் சென்று ஊற்றும் அவலம்!

குறைந்த மேட்டூர் நீர் இருப்பு; பயிர்களுக்கு குடங்களில் தண்ணீர் எடுத்துச் சென்று ஊற்றும் அவலம்!
Published on
Updated on
1 min read

தஞ்சை மாவட்டம் உளூர் பகுதியில் நீரின்றி வறண்டு காணப்படும் பயிர்களுக்கு குடங்களில் தண்ணீர் எடுத்துச் சென்று ஊற்றும் அலவ நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

மேட்டூர் அணையில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினர். ஆனால், அணையில் நீர் இருப்பு குறைந்ததால், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் முறை வைத்து பாசனம் செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால், உளூர், சூரக்கோட்டை உள்ள பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பாலைவனங்களாக காட்சி அளிக்கின்றன. ஆங்காங்கே பாலம் பாலமாக விளை நிலங்கள் வெடித்துள்ளதால் செய்வதறியாது திகைத்து போய் உள்ள விவசாயிகள், கருகும் பயிர்களின் உயிர்காக்க சாலையை கடந்து சென்று பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ஊற்றி வருகின்றனர். 

ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நடவு பணிகளை மேற்கொண்ட நிலையில், தற்போது தண்ணீர் இல்லாதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். கல்லணை கால்வாயில் காங்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படுவதால், நீர் ஊற்றுகள் இன்றி விளை நிலங்கள் வறண்டு வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com