கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் பதவி கிடைக்காது - ஆர் எஸ் பாரதி

தனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் மந்திரி ஆகிவிட்டார்கள். ஒரே கொடி ஒரே கட்சிக்கு உழைத்தால் ஒதுக்கப்படுவார்கள் அதுதான் உண்மை என கூறினார் ஆர்.எஸ்.பாரதி

கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் பதவி கிடைக்காது  - ஆர் எஸ் பாரதி

சென்னை ஆர். ஏ. புரம் தனியார் விடுதியில் மறைந்த  முன்னாள் எம் பி ஜின்னா படத் திறப்பு விழாவில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி  பேசியபோது

 

ஆர் எஸ் பாரதி

கட்சிக்கு விசுவமாக  இருந்தால் அவ்வளவு எளிதில் பதவி கிடைக்காது அதையெல்லாம் ஜீரணித்துக் கொண்டுத்தான் கட்சியில் இருக்க வேண்டும் என பேசினார்.63 வயதில் தான் தனக்கே பதவி கிடைத்தது என பேசியவர்  கட்சியில் பதவி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்யும் அது நியாயமும் கூடதான் என பேசினார்.

மேலும் படிக்க | கலாச்சாரம் என்பது நம் வாழ்வியல்; அது மதம் அல்ல - முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் பேச்சு

உழைத்தவர்களுக்கு எல்லாம் சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்காந்து உள்ளனர் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஆர். எஸ். பாரதி தெரிவித்தார்.  பின்னால் வந்தவர்கள் மந்திரி, எம் எல் ஏ ஆகிவிட்டனர். ஏனெனில் ஒரே கொடி ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை என பேசினார்.

மேலும்படிக்க |மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்

கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள் அதெல்லாம் ஜீரணித்துத்தான் கட்சியில் இருக்க வேண்டும் என பேசிய அவர், வைகோ போன்றவர்கள் முதுகில் குத்திவிட்ட தற்போது கொஞ்சி குளாவுகின்றனர் என பேசிய ஆர் எஸ் பாரதி, கட்சி கொடியையும் சின்னத்தையும் காப்பாற்றவே சிரமப்பட்டதாக தெரிவித்தார்.