கிடப்பில் கிடக்கும் பாதாள சாக்கடை பணி: வாகன ஓட்டிகள் அதிருப்தி

சென்னை மயிலாப்பூர் பிஎஸ் சிவசாமி சாலையில் பாதாள சாக்கடை அகலப்படுத்தும் பணிக்காக குழி தோண்டப்பட்டு பணிகள் நிறைவு பெறாமல் உள்ளதால் இந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.  

கிடப்பில் கிடக்கும் பாதாள சாக்கடை பணி: வாகன ஓட்டிகள் அதிருப்தி

கடந்த 6ஆம் தேதி இரவு திடீரென்று சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு காரணமாக சிறிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.. அதனைத் தொடர்ந்து பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து அதிகாரிகள் பார்வையிட்டு பின் பணிக்காக பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.. மேலும் பணிகள் தொடங்கி 10 நாட்களுக்கு மேலாகியும் பணிகள் நிறைவு பெறலாம் உள்ளதால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் பள்ளத்தில் இருக்கும் கழிவுநீருடன் மழை நீர் சேர்ந்து சாலைகளில் ஆங்காங்கே தேங்கி உள்ளது..

மேலும் இந்த பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருப்பதால்  வாகனங்கள் செல்லக்கூடிய முக்கியமான சாலையாக இந்த சாலை இருப்பதால் பெரிதளவில் வாகனங்கள் செல்ல கூடியதால் மாநகராட்சி மூலம் பெரிதளவில் தடுப்புகள் மற்றும் அபாய பலகை ஏதும் வைக்கப்படாத காரணத்தினால் இரவு நேரங்களில்  விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தோண்டப்பட்ட பள்ளத்துக்கு அருகே வீடுகள் இருப்பதால் வீடுகளில் இருக்கும் மக்கள் வெளியே வருவதற்கு அதிக சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.எனவே பணிகளை விரைவில் முடித்து  பள்ளத்தை  மூடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது..