இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல்...

குடியரசு தலைவரிடம் இந்தி தொடர்பாக அமித்ஷா குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல்...

தமிழக சட்டசபையில் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். 

அப்போது, தமிழ் காக்க சிறை சென்ற நடராசன்- தாளமுத்து உள்ளிட்ட பல்வேறு தியாகிகளை நினைவு கூர்ந்து பேசிய அவர், உயிராய், உணர்வாய் இருக்கும் மொழியை வளர்க்கவும், பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து காக்கவும் திமுக தோன்றியதாக குறிப்பிட்டார். 

1938ம் ஆண்டு முதல் இந்தி மொழித் திணிப்பை தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் அவர் கூறினார். 

மேலும் படிக்க | ஓபிஎஸ் முதலமைச்சரானது தற்செயல் அல்ல...சூழ்ச்சி வெளிவருமா?

இந்திக்கு எதிரானது வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல -தமிழினத்தை - தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டம் என சுட்டுக்காட்டிய அவர், இந்தியாவை ஆளும் பாஜக அரசு இந்தி மொழி  திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளதாகவும், ஆட்சி நிர்வாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கி கல்வி மூலமாகத் திணிப்பது வரை தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பது தான் எனவும் சாடினார். 

ஒரே நாடு,ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து பிற தேசிய  மொழிகளை அழிக்கப் பார்ப்பதாகவும் விமர்சித்தார். 

மேலும் படிக்க | சசிகலா, விஜயபாஸ்கர், மருத்துவர் மீது ஏன் விசாரணை நடத்த வேண்டும்...?

சுதந்திரம் பெற்ற இந்தியா, ஓராண்டு கூட ஒற்றுமையாக இருக்காது என்று வெளிநாட்டுப் பத்திரிகைகள் எழுதிய நிலையில்,  பன்முகத் தன்மையைக் காப்பதன் மூலம் இந்தியா 75 ஆண்டுகளாக ஒன்றுபட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.

 'இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படாது என்றும் அவர்கள் விரும்பும் வரை  ஆங்கிலம் ஆட்சிமொழியாக  நீடிக்கும் எனவும் முன்னாள் பிரதமர் நேரு கூறிய உறுதி மொழி தான் இந்தி பேசாத மக்களை காக்கும் அரணாக இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | அதிமுகவை துவம்சம் செய்யும் ஸ்டாலின்...இனித் தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப் போகும் திமுக..!!

இந்தி மொழி தினத்தை  கொண்டாடும் மத்திய அரசு,  மற்ற மாநில மொழிகளின் தினத்தை கொண்டாடாமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய அவர், அனைத்துத் தேர்வுகளும் இனி இந்தியில் தான் என்று சொல்வதன் மூலமாக, இந்தி பேசும் மாநில மக்களுக்கு மட்டும் தான் அரசு பணி என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இந்தநிலையில் முதலமைச்சரின் உரையால் அதிருப்தி அடைந்த பாஜக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.இருப்பினும் திமுக எம்.எல்.ஏக்களின் ஒட்டுமொத்த ஆதரவால் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 மேலும் படிக்க | ஜெயலலிதா சிகிச்சை விவகாரம்...நெருக்கடிக்குள்ளாகும் விஜயபாஸ்கர் - ராதாகிருஷ்ணன்!