"சிலர் அலங்காரத்திற்காக எட்டு போட்டு வைத்துள்ளனர்" அமைச்சர் மா. சுப்பிரமணியன்!!

Published on
Updated on
1 min read

தூத்துக்குடியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மருத்துவ மாணவிகள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மா சுப்பிரமணியன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

அப்போது மேடையில் பேசிய அவர் எண்ணெய் உணவை தவிர்த்திட வேண்டும், எளிமையாக இருதயத்தை துடிக்க விட வேண்டும் என இருதயம் பற்றி பேசிய அவர் நன்கு நடை பயிற்சி மேற்கொண்டால் இதயத்தை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்ள முடியும் என கூறினார்.

மேலும், எலும்பு, மூட்டி மருத்துவர்கள் அதிகம் நடந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படும் என அறிவுரை கூறாமல் நன்கு நடக்க அறிவுறுத்த வேண்டும் அவ்வாறு நடந்தால் தான் இதயத்தை பாதுகாக்க முடியும் எனக் கூறியவர், நான் எங்கு சென்றாலும் நடை பயிற்சி மேற்கொள்வதை சரியாக கடைபிடித்துக் கொண்டு வருவதாகவும் தான் நடை பயிற்சி மேற்கொள்வது செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் வருவதை பார்க்கக் கூடிய எதிர் கட்சியினர் மா. சுப்பிரமணியனுக்கு வேற வேலையே இல்லை, எங்கு சென்றாலும் நடந்து கொண்டே இருக்கிறார் என எதிர் கட்சி தலைவர்கள் கூறுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், நான் மற்றவர்களைப் போல வீட்டில் அலங்காரத்திற்காக எட்டு போட்டு வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் நான் நடப்பதற்காக போட்டு வைத்துக் கொண்டிருக்கிறேன் எனக் கூறமாட்டேன் என நகைச்சுவையாக பேசியதுடன், அலமாரியில் அன்பளிப்பாக வரக்கூடிய புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு, அன்பளிப்பாக வரக்கூடிய அனைத்து புத்தகங்களையும்  படித்து விடுவேன் எனக் கூறும் அவர்களிடம் சமீபத்தில் என்ன படித்தீர்கள் என்றால் இஇஇ என முழிப்பதும் நான் பண்ணுவது கிடையாது நாங்கள் சொல்வதை தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம் என விமர்சித்துள்ளார்.

அதன் பின்னர், உலக இருதய தின விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்து, நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் களைப்படையாமல் இருப்பதற்காக சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும் எனக் கூறி மரக்கன்றுகளை நடவு செய்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com