முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் விசிட் அடித்த மு.க.ஸ்டாலின்…  

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  
முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் விசிட் அடித்த மு.க.ஸ்டாலின்…   
Published on
Updated on
1 min read

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் அரசுதுறை சார்ந்த தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், பட்டா வழங்க கோரியும், ஓய்வூதிய தொகை கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு  இணையதளம் வாயிலாகவும் தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் மூலமாகவும் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மனுக்களை அளிக்க வந்த மக்களிடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தனிப்பிரிவு துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com