மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சென்னையிலும் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் வௌ்ள பாதிப்பினை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்தநிலையில், மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் , தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தாழ்வான பகுதியில் உள்ள  மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது, துரித நடவடிக்கை மேற்கொள்வது, முகாம்களை தயார் நிலையில் வைப்பது, உயிரிழப்புகளை தவிர்ப்பது  உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்தும்படி,  அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

இந்தநிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு ஸ்டாலின் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு மழை பாதிப்புகளை ஆய்வு செய்யும் அவர், நிவாரண முகாம்களை பார்வையிடுகிறார். இந்த பயணத்தின்போது ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கும் செல்கிறார். அங்கு பயிர் சேதம் குறித்து நேரில் ஆய்வு செய்வார் என கூறப்படுகிறது.