அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை நேரில் ஆய்வு செய்த எம்.பி...!

அரசு பள்ளியில் மதிய உணவு குழந்தைகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்த கொரட்டூர் மாமன்ற உறுப்பினர் உஷா நாகராஜ் மற்றும் மாமன்ற குழு தலைவர் பி.கே. மூர்த்தி.

அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை நேரில் ஆய்வு செய்த எம்.பி...!

சென்னை கொரட்டூர் அக்ரஹாரத்தில் செயல்பட்டு வரும், அம்பத்தூர் நகராட்சி உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி மண்டலம் குழு தலைவர் பி.கே மூர்த்தி மற்றும் 83 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உஷா நாகராஜ்  ஆகியோர் அந்த பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவு முறையாக வழங்கப்படுகிறதா,  உணவு சமைக்கும் கூடத்தை ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

குழந்தைகளுக்கு மதியம் வழங்குவதற்காக தயார் செய்து வைத்திருந்த சாதம் சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றை சோதித்து பார்த்தனர். மேலும் குழந்தைகளுக்கு அன்றாடம் வழங்கப்படும் முட்டையை ஆய்வு செய்தனர். அப்போது அளவில் சிறியதாக உள்ளதை பார்த்து பள்ளி பொறுப்பாசிரியரிடம் கேள்வி எழுப்பினர்.

மேலும், குழந்தைகள் பிளாஸ்டிக் போன்ற பழைய பாத்திரங்களில் உணவு உண்பதை அறிந்து, அனைத்து குழந்தைகளுக்கும் உணவு அருந்த 200 எவர்சில்வர்  பாத்திரம் மற்றும் தரையில் அமர பாய்களையும் வழங்கினர்.

அதோடு, குழந்தைகள் மதிய உணவு சாப்பிடுவதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களோடு அமர்ந்து மாமன்ற குழு தலைவர் பி கே மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் உஷா நாகராஜ் ஆகியோர் பள்ளியில் சமைத்த உணவை அதே பாத்திரத்தில் குழந்தைகளோடு அமர்ந்து சாப்பிட்டனர்.