
மதுரை மாவட்டத்தில் வெளிநாட்டு பயணிகளின் வருகையால் 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமாக மதுரை இருந்து வந்தது. இந்தநிலையில் புதிதாக சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களில் சிலர் வீடுகளிலும், வேறு சிலர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகை கொரோனா என்பதை கண்டறிய மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.