மகா கும்பாபிஷேக விழா...பக்தர்களால் நிரம்பி வழிந்த கோவில்கள்!

மகா கும்பாபிஷேக விழா...பக்தர்களால் நிரம்பி வழிந்த கோவில்கள்!
Published on
Updated on
1 min read

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழா: 

தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் இரும்பு ஆர்ச் அருகே உள்ள பிரசித்தி பெற்ற  உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு யாக சாலை பூஜைகளுக்கு பிறகு கும்பங்கள் விமான கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட சடையம்பட்டியில் கொப்புடையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த ஆறுபாதி கிராமத்தில் ஸ்ரீ முனீஸ்வரன் ஓம் சக்தி மகா காளியம்மன் கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான தவத்திரு சற்குரு பண்ணந்தூர் சித்தர் ஜீவசமாதியில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com