பட்டி தொட்டியெல்லாம் பக்தியை ஊட்டியவர் - சசிகலா புகழாரம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னிர் செல்வம், வி.கே.சசிகலா உள்ளிடோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

மாரடைப்பு காரணமாக பங்காரு அடிகளார் நேற்று மாலை காலமான நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள  எம்.எஸ்.திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு  செவ்வாடை பக்தர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள்  கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  பங்காரு அடிகளாரின் உடலுக்கு  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவை போற்றுதலுக்கு உரியது என கூறினார்.  

இதையும் படிக்க : நடிகை"ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய வேண்டும்" உயர் நீதிமன்றம் உத்தரவு!

தொடர்ந்து வி.கே.சசிகலா நேரில் சென்று பங்காரு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அடிகளாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா,  பட்டி தொட்டியெல்லாம் பக்தியை ஊட்டியவர் என்றும், பெண்கள் பூஜை செய்யும் முறையை கொண்டு வந்த  பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவை பாராட்ட கூடியது எனவும் கூறினார். 

பெண்களுக்கு கருவறையில் எப்போதும் வேண்டுமானாலும் பூஜை செய்ய உரிமையை கொடுத்த மகான் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மறைந்த பங்காரு அடிகளாருக்கு புகழாரம் சூடினார்.  அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர், மறைந்த மகானின் இழப்பு என்பது ஆன்மிக உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று உருக்கமாக தெரிவித்தார்.