மது குடிக்க பணம் தர மறுத்தவரை பீர் பாட்டிலால் குத்திய போதை ஆசாமி..!

சென்னை கோயம்பேட்டில், மது குடிக்க பணம் தர மறுத்தவரை பீர் பாட்டிலால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
மது குடிக்க பணம் தர மறுத்தவரை பீர் பாட்டிலால் குத்திய போதை ஆசாமி..!
Published on
Updated on
1 min read

கோயம்பேட்டில் கூலி வேலை செய்யும் விஜயகாந்த் என்பவரிடம், போதை ஆசாமி ஒருவர் வழிமறித்து, குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு விஜயகாந்த் மறுத்ததை அடுத்து, மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் போதை ஆசாமி விஜயகாந்தை குத்திவிட்டு, அவரது பாக்கெட்டில் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பினார்.

காயமடைந்த விஜயகாந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில், காவல்துறை விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பழைய பல்லாவரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்ததை அடுத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com