காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை கொலை செய்த இளைஞர்...தனிப்படையினரால் கைது!

காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை கொலை செய்த இளைஞர்...தனிப்படையினரால் கைது!

சேலம் அருகே காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை முகத்தில் கல்லை போட்டு கொன்ற இளைஞரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
Published on

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில், கடம்பூர் செல்லும் சாலையில் முருகேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அவருடைய மகள் ரோஜா அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்ற இளைஞர் தோட்டத்திற்கு சென்று பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு மறுக்கவே ஆத்திரமடைந்த இளைஞர் அந்த பெண் மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் பெண்ணின் முகத்தில் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த தனிப்படை போலீசார் சாமிதுரையை கைது செய்தனர். தற்போது அந்த இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com