மழை நேரத்தில் எலெக்ட்ரிக் ஆட்டோவில் கை வைத்த நபர்... தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பரிதாபம்!!

எலெக்ட்ரிக் ஆட்டோவின் மீது கை வைத்த ஓட்டல் ஊழியர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பலியாகியுள்ளார். 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே தனியார் பாஸ்புட் உணவகம் செயல்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமில்லாமல் வட மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று ஹோட்டலை இரவு மூடிவிட்டு அனைவரும் படுக்கச் சென்று விட்டனர். அங்கு கடையில் பொருட்களை ஏற்றி செல்ல பேட்டரி ஆட்டோ போன்ற வாகனம் ஒன்றை உபயோகப்படுத்தி வந்துவந்துள்ளனர். அந்த ஆட்டோவிற்கு சார்ஜ் போட்டு உள்ளனர். அப்பொழுது நேபாளத்தைச் சேர்ந்த ஜீவன் பொன் மகர் என்பவர் ஸ்கூட்டரின் மீது கை வைத்துள்ளார். இரவில் மழை பெய்து கொண்டிருந்ததால், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் ஹோட்டலை திறப்பதற்கு எழுந்து பார்த்த பொழுது ஜீபன் பொன்மகர் தலையில் காயத்துடன் சார்ஜ் போடப்பட்டிருந்த ஆட்டோவின் அருகே இறந்து கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் அளித்த தகவல் படி திட்டக்குடி போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதையும் படிக்க || சொத்து வரியை செலுத்த கால அவகாசம்... தவறினால் அபராதம்!!