உத்தமர்கோவிலில் நடந்த கட்டணமில்லா கல்யாணம்!!!

தமிழக அரசின் அறிவிப்பின்படி திருச்சி உத்தமர்கோவிலில் மணமக்களுக்கு இலவச புத்தாடைகள் வழங்கப்பட்டு கட்டணமில்லா முறையில் திருமணம் நடைபெற்றது.
உத்தமர்கோவிலில் நடந்த கட்டணமில்லா கல்யாணம்!!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கட்டணம் ஏதுமின்றி திருமணம் நடத்தப்படும்.

மேலும் மணமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவச புத்தாடைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததன் பேரில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுக்கா, சூரக்குழி கிராமத்தை சேர்ந்த, சந்திரகாசு - இந்திராணி தம்பதியின் மகள் தேவி என்ற மாற்றுத்திறனாளி மணப்பெண்னுக்கும், ஜெயங்கொண்டம் தாலுக்கா, வங்குடி கிராமத்தை சேர்ந்த நெடுமாறன் - செல்லம் தம்பதியின் மகன் செந்தில்குமார் என்ற மணமகனுக்கும், திருமணம் நடந்தது.

திருச்சி மாவட்டம், உத்தமர்கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசு அறிவிப்பின்படி மணமகளுக்கு பூமாலை, புத்தாடைகள் மற்றும் 2 கிராம் தாலி உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்பட்டு கட்டணம் இல்லா முறையில் திருமண நடத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் கலந்து மணமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததை அடுத்து, திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. மேலும், தாலி கட்டியதும், ஜோடியாக சென்று, சாமி தரிசனம் செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com