கடும் பனிப்பொழிவால் கருகி வரும் மா பூக்கள் - விவசாயிகள் கவலை

கடும் பனிப்பொழிவால் கருகி வரும்  மா பூக்கள் - விவசாயிகள் கவலை

கிருஷ்ணகிரியில் கடும் பனிப்பொழிவால் மா பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, சந்தூர், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவு விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு பெய்த கனமழையால் மா மரங்களில் பூக்கள் நன்கு பூத்துள்ள நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக மா பூக்கள் கருகி உதிர்ந்து வருவதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.