மணிப்பூர் விவகாரம்: வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்!

மணிப்பூர் விவகாரம்: வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்!

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மாநில கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர்கள் மணிப்பூர் கலவரம் மற்றும் பட்டியலின பெண்களுக்கு நடந்த வன்கொடுமை ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாணவர்கள், மணிப்பூரில் நடைபெற்றுவரும் கலவரம் மற்றும் 2 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அத்துமீறல் சமூக நீதிக்கு எதிராக உள்ளது. இரண்டு மாதங்களைக் கடந்தும் இந்த கலவரத்தை பற்றி அந்த மாநிலத்தின் முதலமைச்சரோ பிரதமரோ வாய் திறக்காமல் இருப்பது ஏன் எனவும், பாஜக, ஆர்.எஸ்.எஸ் இன் அடக்கு முறையால் தான் இது போன்ற சம்பவம் நடக்கிறது எனவும் கூறினார்.

மேலும், பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய மாணவர்கள் மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்றால் தற்போது நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டம் சாலை மறியலாக மாறும் எனவும், இன்று மாநில கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் மாநில முழுவதும் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:லூலு மார்க்கெட் விவகாரம்: "ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி... பெரு முதலாளிகளுக்கு துணை போகிறார்கள்" த. வெள்ளையன் காட்டம்!