மாஸ்டர் பிளான்: தனி தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை - ஒன்றிணைய நேரம் வந்துவிட்டது - சசிகலா

தனி தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை... நான் எப்போதும் சொல்வது எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் ; அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம்

மாஸ்டர் பிளான்: தனி தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை - ஒன்றிணைய நேரம் வந்துவிட்டது - சசிகலா

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் 

 பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் வி.கே.சசிகலா  மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரையும் சமாதானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்  அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, என்னை பொறுத்தவரை திமுக, கருணாநிதி, தீய சக்தி என்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் என இரண்டு தலைவர்களும் சொன்னதை நாம் மனதில் வைத்து நம்மளுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன், நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற வார்த்தையை தான் இப்பவும் சொல்கிறேன் எப்பொழுதும் சொல்கிறேன் என்றார். 

அதிமுக ஒன்றிணைவதற்கு நெருங்கிவிட்டோம்

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஒன்றிணைவதற்கு மிக பக்கத்தில் நெருங்கி விட்டோம் எனவும் தனித்தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை. ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பது தான் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை சொல்லுவது என்ற அவர், ஒன்றிணையும் சூழ்நிலை வந்துவிட்டது என்பது எனக்கு தெரிகிறது, உங்களுக்கு தெரியவில்லை எனக்கு தெரிகிறது என தெரிவித்தார். இடைத்தேர்தலில் உங்களுடைய நிலைபாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் தன்னுடைய நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். 

பாஜக தலைவரை இரு அணியினரும் தனித்தனியாக சென்று பார்ப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக என்பது என்ன என்பதை  முழுமையாக புரிந்து கொண்டால் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது.கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, பேனா நினைவுச்சின்னம் வைப்பதை நான் எதிர்க்க தான் செய்கிறேன், அதற்கு காரணம் கடலுக்குள் நினைவு சின்னம் வைப்பது நல்லது அல்ல,  மீனவர்களை பாதிக்கும், காவல்துறைக்கு சவலாக இருக்கும் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்திகிறேன். அப்படி நினைவு சின்னம் வைக்க வேண்டும் என்று   ஆசை இருந்தால் கருணாநிதியின் சமாதியில் நினைவு சின்னத்தை வைக்கலாம் என்றார். 

பா.ஜ.க. மீது அதிரடி கருத்து தெரிவித்த இபிஎஸ் தரப்பின் சி.பொன்னையன்

இத்தனை அடி உயரத்தில் தான் வைக்க வேண்டும் என்பது கணக்கில்லை, தமிழ்நாட்டின் நிதி நிலையை பார்க்க வேண்டும் அதற்கு ஏற்றார்போல் தான் திட்டங்களை செய்ய வேண்டும். மக்களுக்கு பயன்படும் திட்டங்களை எல்லாம் நிறுத்தி வைக்கிறார்கள் கேட்டால் நிதி இல்லை அதற்கு ஏற்றார்போல்தான் திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் கேட்டால் அதற்கு நீதி இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் வேண்டாம் என்று சின்னம் வைக்க மட்டும் அரசியல் நிதி எப்படி வந்தது? என கேள்வி எழுப்பினார். 

இருதியாக அதிமுகவின் இரு அணிகள் ஒன்று சேருமா என்ற கேள்விக்கு, எல்லோரும் ஒன்றினையும் நேரம் வந்து விட்டது என்றார்.