மருத்துவ ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் - மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமன்னூரை சேர்ந்த சுமதி என்ற பெண்ணின் கருப்பையில், குழந்தை இறந்து பிறந்ததாகக் கூறி அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் கவனக் குறைவால் குழந்தை இறந்ததாகக் கூறி சுமதி அளித்த புகார் மீதான விசாரணையின்போது, சுமதி மற்றும் குழந்தையின் மருத்துவ அறிக்கைகள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப் படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவ கல்லூரிகளை கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி! - அண்ணாமலை

இதனையடுத்து, மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை குறித்த ஆவணங்களை பராமரிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.