உயிரைக் காக்கவே மருத்துவம், உயிரை மாய்த்துக் கொள்வதற்கு அல்ல - தமிழிசை!

உயிரைக் காக்கவே மருத்துவம், உயிரை மாய்த்துக் கொள்வதற்கு அல்ல - தமிழிசை!

மருத்துவப் படிப்பு உயிரைக் காப்பாற்றுவதற்கு தானே தவிர உயிரை மாய்த்துக் கொள்வதற்காக அல்ல என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மகாகவியின் நினைவுநாள்:

மகாகவி பாரதியாரின் 101 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க: சிக்கன் தருவியா...மாட்டியா...ரகளை செய்த இளைஞர்கள்...!

தமிழிசை பெருமிதம்:

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மகாகவி பாரதியாரைப் பாதுகாத்து வைத்திருந்த இடத்தில் ஆளுநராக இருப்பது குறித்து பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

நீட் தற்கொலை:

இதையடுத்து, நீட் தேர்வு பயம் காரணமாக ஏற்படும் மாணவர்களின் தற்கொலை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உயிரை காப்பாற்றுவதற்கு தான் மருத்துவமே தவிர, உயிரை மாய்த்துக் கொள்வதற்கு மருத்துவம் இல்லை என்றும், இதை அனைவரும் மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.