நீட்தேர்வு பாதிப்பா..? இல்லையா..? ஜூலை 5ல் மீண்டும் ஆலோசனைக்கூட்டம்...

நீட் தேர்வு குறித்து தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் என மொத்தம் 86,342 மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளதாக  ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட்தேர்வு பாதிப்பா..? இல்லையா..? ஜூலை 5ல் மீண்டும் ஆலோசனைக்கூட்டம்...
நீட் தேர்வு மாணவர்களிடையே ஏற்படுத்திய பாதிப்பு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் 3வது ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 
 
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.ராஜன் தபால், மின்னஞ்சல் மூலம் என மொத்தம் 86,342 மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளதாகவும் சிலர் வேண்டும், வேண்டாம் என்ற ஒற்றை நிலைப்பாட்டை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிலர் ஏன் வேண்டாம் என்று விரிவாக கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதுபோல் பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக ராஜன் கூறினார்.  கிடைக்கப் பெற்றுள்ள கருத்துகளை ஆராய்ந்து விரிவான ஆய்வறிக்கையை தயாரிக்க வேண்டும்.
 
அறிக்கை தயார் செய்வது குறித்து குழு உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும்  தங்களுக்கு ஒரு மாதம் கால  அவகாசம் தரப்பட்டுள்ளது என்றும்   அதற்குள் அறிக்கை தயார் செய்ய முயற்சித்து வருகிறோம். எனவும் தெரிவித்துள்ள ராஜன், வருகிற 5-ம் தேதி அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். .